Pages

Saturday 9 May 2020

சிங்கமும் புத்திசாலி கழுதையும்

சிங்கமும் புத்திசாலி கழுதையும்

ரு காட்டில் இருந்த ஏரியின் ஒரு பக்கத்தில் சிங்கமும் மறு பக்கத்தில் கழுதையும் தண்ணீர் குடித்து கொண்டிருந்தன. சிங்கமோ எப்படியாவது கழுதையை மத்திய உணவாக்கிட வேண்டும் என்று எண்ணியது.

மெதுவாக கழுதையிடம், கழுதையாரே! உங்கள் நண்பர்களை கூப்பிடுங்கள் எனக்கு பாட்டு கேட்க வேண்டும் போல் இருக்கிறது என்றது. உடனே, கழுதை அதற்கென்ன நானே பாடுகிறேன் கேளுங்கள் என்றவாறு பாட ஆரம்பித்தது.

இதுதான் சமயம் என்று என்னிய சிங்கம் கழுதை மீது அக்கரைக்கு பாய்ந்தது. புத்திசாலி கழுதையோ அந்த இடத்திலிருந்து சற்று நீங்கி விட்டது. சிங்கம் அடுத்து பாய்வதற்கு தயாரானது. உடனே கழுதையார்! சிங்கமே நான் உங்களது மதிய சாப்பாட்டிற்கு வருகிறேன். ஆனால் வலிமை மிக்க விலங்குகள் எல்லாமே சாப்பாட்டிற்கு முன் கடவுளை வணங்குவது வழக்கம். தாங்கள் எப்படியோ? என்றது.



சிங்கம் அதை கேட்டதும் தற்பெருமையில் "நான் தான் இந்த காட்டிலேயே வலிமையானவன்" என மனதிற்குள் என்னியவாறு கண்களை மூடி கடவுளை வணங்க ஆரம்பித்தது. அதுதான் தாமதம்! கழுதையோ ஒரே ஓட்டமாக ஓடி காட்டிற்குள் மறைந்தது விட்டது. சிங்கம் கண்களை திறந்த போது கழுதை இல்லை. தான் ஏமாந்ததை புரிந்து கொண்டு நடையை கட்டியது.

"அகங்காரம் முட்டாளாக்கிவிடும்"-அல்லவா குட்டிஸ் 

Tuesday 7 April 2020

இறைவனது எல்லா படைப்பிற்கு ஒரு அர்த்தம் உண்டு

ஒரு வழிப்போக்கர் பாலைவனத்தின் வழியாக நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அவர் வெயிலின் தாக்கத்தால்  மிகுந்த களைப்படைந்து நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அருகில் ஒரு காடு இருப்பது கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அங்கு சென்றதும் அதன் அழகை கண்டு ஆச்சர்யம் அடைந்தார். இந்த பாலைவனத்தின் நடுவில் இப்படி ஒரு காடு இருப்பதை கண்டு இதை உருவாக்கியவன் மிகவும் அடி முட்டாளாகத் தான் இருப்பான் என மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

அந்தக் காட்டில் ஆரஞ்சு மரத்தில் பழங்கள் பழுத்து இருப்பதைக் கண்டான். அதே மரத்தடியில் பூசணிக்கொடியில் காய்கள் காய்த்திருப்பதையும் கண்டான். மீண்டும் மனதிற்குள் ஆரஞ்சு பழங்கள் கீழே கொடியிலும் பூசணிக்காய்கள் மேலே மரத்திலும் காய்த்திருந்தால் எவ்வளவு அழகாக இருந்திருக்கும் என நினைத்துக்கொண்டான்.

அப்படியே களைப்பில் அந்த ஆரஞ்சு மரத்தடியில் ஆழ்ந்து தூங்கி விட்டான். திடீரென அவனது தலையில் "டப்" என்று ஏதோ விழ தூக்கம் கலைந்து திடுக்கிட்டான். வழிப்போக்கன் சுற்றும் முற்றும் பார்த்தான். பக்கத்தில் எதையும் காணவில்லை. அப்போது மீண்டும் ஒரு ஆரஞ்சு பழம் கீழே விழ, அதுதான் தன்மேல் விழுந்தது என்பதை உணர்ந்தான்.

அப்போதுதான் அவனுக்கு ஓன்று உணர்ந்தது. இறைவன் எல்லாவற்றையும் சரியாகவே படைத்துள்ளான். அந்த பூசணிக்காய் மேலே காய்த்து அது தன் தலையில் விழுந்திருந்தால் தன் நிலைமையை எண்ணி பார்த்தான். இறைவனது எல்லா படைப்பிற்கு ஒரு அர்த்தம் உண்டு என்பதை உணர்ந்தான்.  அவனது கிண்டல் குணங்கள் மறைந்து அவனது ஊருக்கு பயணமானான்.

"இறைவனது எல்லா படைப்பிற்கு ஒரு அர்த்தம் உண்டு அல்லவா" குட்டிஸ்!!!