Pages

Tuesday 7 April 2020

இறைவனது எல்லா படைப்பிற்கு ஒரு அர்த்தம் உண்டு

ஒரு வழிப்போக்கர் பாலைவனத்தின் வழியாக நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அவர் வெயிலின் தாக்கத்தால்  மிகுந்த களைப்படைந்து நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அருகில் ஒரு காடு இருப்பது கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அங்கு சென்றதும் அதன் அழகை கண்டு ஆச்சர்யம் அடைந்தார். இந்த பாலைவனத்தின் நடுவில் இப்படி ஒரு காடு இருப்பதை கண்டு இதை உருவாக்கியவன் மிகவும் அடி முட்டாளாகத் தான் இருப்பான் என மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

அந்தக் காட்டில் ஆரஞ்சு மரத்தில் பழங்கள் பழுத்து இருப்பதைக் கண்டான். அதே மரத்தடியில் பூசணிக்கொடியில் காய்கள் காய்த்திருப்பதையும் கண்டான். மீண்டும் மனதிற்குள் ஆரஞ்சு பழங்கள் கீழே கொடியிலும் பூசணிக்காய்கள் மேலே மரத்திலும் காய்த்திருந்தால் எவ்வளவு அழகாக இருந்திருக்கும் என நினைத்துக்கொண்டான்.

அப்படியே களைப்பில் அந்த ஆரஞ்சு மரத்தடியில் ஆழ்ந்து தூங்கி விட்டான். திடீரென அவனது தலையில் "டப்" என்று ஏதோ விழ தூக்கம் கலைந்து திடுக்கிட்டான். வழிப்போக்கன் சுற்றும் முற்றும் பார்த்தான். பக்கத்தில் எதையும் காணவில்லை. அப்போது மீண்டும் ஒரு ஆரஞ்சு பழம் கீழே விழ, அதுதான் தன்மேல் விழுந்தது என்பதை உணர்ந்தான்.

அப்போதுதான் அவனுக்கு ஓன்று உணர்ந்தது. இறைவன் எல்லாவற்றையும் சரியாகவே படைத்துள்ளான். அந்த பூசணிக்காய் மேலே காய்த்து அது தன் தலையில் விழுந்திருந்தால் தன் நிலைமையை எண்ணி பார்த்தான். இறைவனது எல்லா படைப்பிற்கு ஒரு அர்த்தம் உண்டு என்பதை உணர்ந்தான்.  அவனது கிண்டல் குணங்கள் மறைந்து அவனது ஊருக்கு பயணமானான்.

"இறைவனது எல்லா படைப்பிற்கு ஒரு அர்த்தம் உண்டு அல்லவா" குட்டிஸ்!!!